தமிழ் பேசும் மக்கள் அதிகம் பணிபுரியும் ரியாத் மோடா கேம்பில் தஃவா மற்றும் ஏகத்துவ விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி கடந்த 18.10.2012 வியாழன் இஷாவுக்குப் பின் நடைபெற்றது.
மண்டல பேச்சாளர் மௌலவி செய்யது அலி பைஜி, “வளர்ந்து வரும் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும், மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் அவர்கள், TNTJ செய்து வரும் பணிகள் மற்றும் இரத்தான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். சகோதரர் பி.ஜெ. அவர்கள் உடல் நலம் குறித்து விளக்கப்பட்டு அனைவரும் அவர்களுக்காக துவாச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மோடா கேம்ப் தஃவா பொறுப்பாளர் சகோ. ஹூஸைன் மற்றும் மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு மார்க்கத்தின் தெளிவினைப் பெற்றுச் சென்றார்கள்.
No comments:
Post a Comment