ரியாதில் தஃவா பணிகளை முடுக்கி விடும் முயற்சியாக, புறநகர் பகுதிகளில் உள்ள கேம்புகளில் சென்று ஏகத்துவத்தை எடுத்தியம்பும் பணி நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, அதிகமான தமிழ் மக்கள் பணிபுரியும் மோடா கேம்பில் குழு தஃவா மற்றும் ஏகத்துவ விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி கடந்த 20.09.2012 வியாழன் அன்று இரவு நடைபெற்றது.
மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "இறையச்சமும், இஹ்லாஸும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும், மண்டல துணைச் செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் அவர்கள், உலகம் முழுவதும் TNTJ செய்து வரும் பணிகளை குறிப்பிட்டு, நமது தஃவா/சமுதாய பணிகளை பட்டியலிட்டார். மேலும், கேம்ப் அதிகாரிகளிடமும் நமது தஃவா சம்பந்தமான ஆலோசனைகள் செய்யப்பட்டன.
தொடர்ச்சியாக, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துமாறு, மோடா கேம்ப் தஃவா பொறுப்பாளர் சகோ. ஹூஸைன் கேட்டுக் கொண்டார். மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார். "ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்" என்ற துண்டுப்பிரசுரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment