அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இறையச்சம்" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக, கடந்த 19.09.2012 புதனன்று இரவு, கதீம் செனைய்யா பகுதி இந்தியன் பில்டிங்கில் குடும்பத்தினருக்கான மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையிலும், கிளைச் செயலாளர் சகோ. மாலிக், கிளை பொருளாளர் சகோ. ஷாக்கிர், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ, ஷிஃபா சிராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், "இறையச்சம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அனைவருக்கும் மார்க்க விளக்க டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
ஆண்கள்/பெண்கள்/சிறார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும், கதீம் செனைய்யா கிளை சார்பாக இம்மாதம் முழுவதும், "ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்" என்ற மார்க்க விளக்க துண்டுப் பிரசுரமும் கேம்புகளிலும், தமிழ் முஸ்லிம் மக்கள் பணிபுரியும் நிறுவனங்களிலும் சென்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.