அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“சின்னஞ்சிறு நல்லமல்கள் பெரும் நன்மைகள்" - ரியாத் மண்டலத்தில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் சார்பாக, கடந்த 11.10.2012 வியாழன்று இரவு, சுலை பகுதி அல்-அயில்ல இஸ்திராஹாவில், குடும்பத்தினருக்கான மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் மவுலவி அவர்கள், “சின்னஞ்சிறு நல்லமல்கள்; பெரும் நன்மைகள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆண்கள் / பெண்கள் / சிறார்கள் என சுமார் 100 பேர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் குர்பானியின் அவசியம் மற்றும் இரத்த தான முகாம் குறித்து விளக்கினார்.

மேலும், ரியாத் மண்டலம் சார்பாக "குர்பானியின் சட்டங்கள்" என்ற மார்க்க விளக்க துண்டுப் பிரசுரமும், “இரத்த தானம் செய்வீர்! இறையருளைப் பெறுவீர்!“ என்ற துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது, மேலும், மர்கஸிலும், பொது இடங்களிலும் விநியோகிக்கப்படுகின்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.