கடந்த 24.10.2012 புதன் அன்று இரவு, ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா தலைமை தாங்கினார். மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம், கிளை பொருளாளர் சகோ. ஷாக்கிர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "ஊடக பயங்கரவாதம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இரத்த தான முகாம், கூட்டுக் குர்பானி திட்டம், 2013 க்கான தஃவா காலண்டர் மற்றும் மண்டல - மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நவ்லக் விளக்கினார். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் கதீம் செனைய்யா கிளை சார்பாக “அரஃபா நோன்பு” பற்றிய விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கதீம் செனைய்யா கிளை
கிளை நிகழ்ச்சி
"ஊடக பயங்கரவாதம்" - கதீம் செனைய்யா கிளையில் பயான் நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment