கடந்த 12-10-12 அன்று ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. முதலில் தாயகத்திற்கு சென்று திரும்பிய மண்டல பொறுப்பாளர்களுள் ஒருவரான சகோ.அரசூர் ஃபாரூக் அவர்கள், ‘யார் வெற்றியாளர்கள்?’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
அடுத்ததாக மண்டல பேச்சளரான சகோ. அன்சாரி அவர்கள், 'அல்லாஹ்வின் வல்லமை' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மௌலவி.செய்யதலி ஃபைஸி அவர்கள், ‘சகோ.பீ.ஜே ஏற்படுத்திய தாக்கம்’ பற்றி சிற்றுரையாற்றினார்.
இறுதியாக சகோ.பீ.ஜே அவர்களின் கடிதத்தையும் அதற்கான விளக்கத்தையும் எடுத்துக் கூறிய சகோ.முஹம்மது மாஹீன், வருகின்ற வெள்ளியன்று ஹாஜிகளுக்காக ரியாதில் நடைபெற இருக்கும் இரத்ததான முகாம் பற்றியும் கூட்டுக்குர்பானி தமிழகத்தில் விநியோகிக்கப்படும் செய்தியையும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அனைவரும் சகோதரர் பீ.ஜே அவர்களுக்காக துஆ செய்யச் சொல்லி கண்கள் கலங்க கேட்டுக் கொண்டதும் கலந்து கொண்டவர்கள் அதை ஏற்றுக் கொண்டதும் உருக்கமாக இருந்தது.
எல்லாம் வல்ல இறைவன் தமிழகத்தில்; சகோ.பீ.ஜே அவர்கள் மூலமாக ஊன்றிய விதை இன்று விருட்சமாக முளைத்துள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பேச்சாளர்கள், இந்த சோதனையான காலகட்டத்தில் இறைவன் அவருக்கு பொறுமையை வழங்க வேண்டும் என்றும் அவர் பூரண குணம் பெற்று இன்னும் பல காலம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக ஒவ்வொரு கரங்களும் படைத்தவனை நோக்கி உயர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மொத்தத்தில் இன்றைய கூட்டம் சகோ.பீ.ஜே வுக்கான சிறப்புக் கூட்டமாகவே அமைந்தது.
No comments:
Post a Comment