அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பரிபூரண மார்க்கம் இஸ்லாம்" - ரவ்தா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

டந்த 14-09-12 அன்று ரவ்தா கிளையில் ஜூம்ஆ தொழுகைக்கு பின் மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஸலாஹூத்தீன் அவர்கள் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ. மௌலவி.செய்யதலி ஃபைஜி அவர்கள், "பரிபூரண மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் சமகால நிகழ்வுகளை சுட்டிக் காட்டி பேசினார்.

பின்னர் தலைமை மற்றும் மண்டல செய்திகளை குறிப்பிட்ட சகோ.முஹம்மது மாஹீன், அஸ்ஸாம் முதல்வரை கண்டித்து டி.என்.டி.ஜே நடத்திய போராட்டத்தையும் அமெரிக்காவை கண்டித்து சனிக்கிழமையன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டி.என்.டி.ஜே நடத்தும் போராட்டத்தையும் எடுத்துக் கூறினார்.

மேலும், ரவ்தா கிளை சார்பாக, துண்டுப்பிரசுரம் விநியோகம், டிவிடிக்கள் அன்பளிப்பு, புத்தகங்கள் அன்பளிப்பு முதலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.