ரியாத் மண்டலத்தின் அல்கர்ஜ் கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி, ரியாதிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவிலுள்ள அல்கர்ஜ் சஹானா பகுதியில் கடந்த 12.10.2012 மதியம் நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் சகோ. அன்சாரி முன்னிலை வகித்தார்.
மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், "கொள்கையில் உறுதி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல - மாநில செய்திகளை எடுத்துக் கூறினார்.
அல்கர்ஜ் கிளை சார்பாக, குர்பானி சட்டங்கள் என்ற துண்டுப்பிரசுரம் இம்மாதம் விநியோகிக்கப்படுகின்றது. மேலும், இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், இனிய மார்க்கம் டிவிடிக்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment