மலஸ் கிளையில் கடந்த 19-09-2012 அன்று கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் அவர்களின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மண்டல மருத்துவ அணி செயலாளரும், மண்டல பேச்சாளர்ருமான சகோ.முஹம்மது மாஹீன் ‘நிர்வாகிகளின் பண்புகள்’ எனும் தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி நடத்தினார்.
அடுத்ததாக கிளை தலைவர் சகோ.அலாவுதீன் அவர்கள், மலஸ் கிளை செய்து வரும் பணிகளை குறிப்பிட சகோ.காஜா அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் பற்றி எடுத்து வைத்தார். அவை அனைவரிடமும் ஆலோசிக்கப்பட்டு இலவச டிவிடிக்கள் வழங்குதல், வாரத்திற்கு ஒரு தலைப்பில் சீசனுக்கு ஏற்றவாறு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல், ஆன்லைன் நிகழ்ச்சிகள், ஃபேமிலி பயான்கள், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாற்று மத சகோதரர்களிடம் தாவாவை அதிகப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி விவாதம் செய்யப்பட்டு அதற்கான பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment