தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தில் கடந்த 21-09-12 வெள்ளிக்கிழமையன்று இஷா தொழுகைக்கு பின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலவி.செய்யதலி ஃபைஸி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கேள்வி -பதில் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
அதை தொடர்ந்து மௌலவி.உபைதுல்லாஹ் அவர்கள், ‘உறுதிமிக்க இப்ராஹிம் நபி’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
அடுத்ததாக ‘மண்ணறை வாழ்க்கை’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.யூனுஸ் அவர்கள், கப்ரில் நடக்கும் வேதனைகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்தார்.
இறுதியாக அமெரிக்க அரசுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை, புதுவை, தமிழகத்தில் செய்த வீரியமிக்க போராட்டத்தை எடுத்துரைத்த சகோ.முஹம்மது மாஹீன் மண்டல செய்திகளையும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment