ரியாதிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லைலா அல் அஃப்லாஜ் என்ற பகுதியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள மக்களின் வேலை நேரத்தை அனுசரித்து, கடந்த 27.09.2012 வியாழன்று இரவு 12 மணிக்கு நடைபெற்ற அந்நிகழ்ச்சிக்கு மண்டல துணைச் செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் தலைமை தாங்கினார். அஃப்லாஜ் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘நபிகள் நாயகம் உலகின் முன் மாதிரி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வரும் போராட்டங்களையும் சமுதாய புரட்சிகளையும் எடுத்துரைத்தார். மேலும், மண்டல செயல்பாடுகளையும் விளக்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு இரவு உணவு வழங்கப்பட்டது.
மேலும், மாமனிதர் நபிகள் நாயகம் பற்றிய "யார் இவர்?" விழிப்புணர்வு நோட்டீஸ் அஃப்லாஜ் பகுதி தமிழ் பேசும் மக்களிடையே விநியோகிக்கப்பட்டு வருகின்றது. மலையாள சகோதரர்களுக்கு மலையாள மொழி ஏகத்துவ புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment