கடந்த 11.10.2012 அன்று இரவு 10.30 மணிக்கு ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையின் மாதாந்திர பயான் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் கூட்டத்தை துவக்கி வைக்க மண்டலப் பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் ”மதங்கள் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் மாநிலத் தலைமையிலிருந்து வெளியிடப்பட்ட சகோ. பி.ஜெ அவர்களின் உடல்நலம் பற்றிய செய்தியைக் குறிப்பிட்டு அவருக்காக ஐவேளைத் தொழுகையிலும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார். ரியாத் மண்டலம் சார்பாக எதிர்வரும் அக்டோபர் 19 ந்தேதி நடைபெறவிருக்கும் 21 வது இரத்ததான முகாமில் கலந்து கொள்ளுமாறு ஆர்வமூட்டி குருதிக் கொடையளிக்க அவசியமான செய்திகளைக் கூறினார், குர்பானியின் அவசியம் பற்றிய செய்திகளுடன் இக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனவருக்கும் மற்றும் நஸீம் மாரத் பகுதியிலும் இரத்த தான விழிப்புணர்வு, குர்பானியின் சட்டங்கள் மற்றும் யார் இவர் என்ற நோட்டீஸும் மற்றும் டிவிடிகளும் கொடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment