அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பாவ மன்னிப்பு" - முர்சலாத் கிளையில் பயான் மற்றும் பொதுக்குழு

ரியாத் மண்டலத்தின் முர்ஸலாத் கிளையின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பயான் நிகழ்ச்சி, கடந்த 28.09.2012 வெள்ளியன்று, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. NAM அயூப் மற்றும் பொறுப்பாளர் கடையநல்லூர் சகோ. அமீர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் மவுலவி அவர்கள், "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னதாக, கிளைக்கூட்டத்திலும், மற்றும் முர்சலாத்தின் இன்னபிற பகுதிகளிலும், "யார் இவர்?" மற்றும் "ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்" என்ற துண்டுப் பிரசுரங்கள், கிளை சார்பாக விநியோகிக்கப்பட்டன.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.