அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"கொள்கையில் உறுதி" - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

ஷிஃபா கிளையின் மாதாந்திர பயான் கடந்த 12.10.2012 ஜீம்ஆ தொழுகைக்குப்பின் கிளைப் பொறுப்பாளர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்றது.

கிளை துணைச் செயலாளர் சகோ. முஹம்மது அலி கூட்டத்தை துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மண்டலப் பேச்சாளர் மௌலவி உபையதுல்லா ’கொள்கையில் உறுதி” என் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். எத்தனையோ சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் கொள்கையில் நிலையான உறுதி இருந்தமையால் மார்க்கத்திற்காக தன்குடும்பத்தையே அர்ப்பணித்த அம்மார் (ரலி) அவர்களின் தியாகத்தை எடுத்துரைத்தும் ஏனைய சஹாபாக்களின் தியாக வரலாற்றை நினைவு கூறும் விதமாகவும் அவரது உரையிருந்தது.

அடுத்ததாக  எதிர்வரும் 19.10.2012 வெள்ளிக்கிழமை கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடக்கவிருக்கும் 21 வது இரத்ததான முகாம் செய்தி, கூட்டுக் குர்பானியைப் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை மண்டலத் துணைச் செயலாளர் நூருல் அமீன் எடுத்துரைத்தார். இறுதியாக  மௌலவி பி.ஜே. அவர்களின் உடல் நிலை குறித்து விளக்கப்பட்டு அவர்களுக்காக அனைவரும் துவாச் செய்ய வேண்டுமாய் வேண்டுகோள் வைக்கப்பட்டு 2 மணிக்கு மதிய உணவுடன் இக் கூட்டம் நிறைவுற்றது.

குர்பானியின் சட்டங்கள் மற்றும் "இரத்த தானம் செய்வீர்! இறையருளைப் பெறுவீர்" ஆகிய துண்டுப் பிரசுரங்கள் ஷிஃபா பகுதி முழுவதும் விநியோகிக்கப்பட்டன.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.