அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அன்றாட சின்னஞ்சிறு நல்லமல்கள்"- ரியாத் மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு - 05.10.2012

ரியாத் மண்டல மர்கஸில் நடைபெறும் வாராந்தர சொற்பொழிவு மற்றும் விநாடி விநா நிகழ்ச்சி, கடந்த 05.10.2012 வெள்ளியன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி நிகழ்ச்சியை நடத்தினார்.

ரியாத் மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் மவுலவி அவர்கள், "அன்றாட சின்னஞ்சிறு நல்லமல்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நாம் அலட்சியமாக நினைக்கும் சிறிய அமல்கள் கூட, அல்லாஹ்வின் தராசில் அதிக அளவில் கணக்கும் அளவிற்கு நம்மீது அருட்கொடைகளை அள்ளிச் சொரிந்துள்ளான் என்று விளக்கி பேசினார்.

முன்னதாக, பயிற்சிப் பேச்சாளர் வரிசையில், சகோ. நைனா முஹம்மது மற்றும் சகோ. கதிரை ஹாஜா ஆகியோர், "ஹதீஸ்கள்" மற்றும் "12 ரக்அத் சுன்னத் தொழுகை" ஆகிய தலைப்புகளில் சிற்றுரை ஆற்றினர். மேலும், விநாடி விநா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல துணைச் செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக், மண்டல - மாநில செய்திகளை பட்டியலிட்டு, இரத்த தானம் மற்றும் குர்பானி ஆகியவை குறித்து விளக்கினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.