ரியாத் மண்டலம் சார்பாக, அல்கர்ஜ் ரோட்டில் அமைந்திருக்கும் அல்ஹீத் பகுதியிலுள்ள அல் ஃபோர்ஸான் கேம்பில் கடந்த 12-10-2012 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
கேம்ப் பொறுப்பாளர் சகோ.பாசுதீன் அவர்களின் ஏற்பாட்டில் முதன்முதலாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மண்டலம் சார்பாக சகோ.முஹம்மது மாஹீன், ‘இஸ்லாத்தின் தனித்தன்மை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில் இஸ்லாம் தனித்து விளங்கும் காரணத்தால் அதை படிப்பவர்களும் புரிந்து கொள்பவர்களும் அணி அணியாய் இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
அடுத்ததாக மண்டல துணைச் செயலாளர் சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக் அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வரும் அரும்பணிகளை குறிப்பிட்டார். ஆர்வமுடன் கலந்து கொண்ட மக்கள் மாதந்தோறும் தொடர்ந்து பயான் நடத்தும் படி வேண்டுகோள் வைத்தனர்.
ஃபோர்ஸான் கேம்ப் சார்பாக ‘குர்பானியின் சட்டங்கள்’ எனும் நோட்டீஸ் மற்றும் டிவிடிக்கள் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment