ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 07.09.2012 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“இலக்கை நோக்கிய பயணம்” என்ற தலைப்பில் மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள் சிறப்புரையாற்றி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.
கடந்த மாத ஃபித்ரா, இஃப்தார் பயான் நிகழ்ச்சிகள், மெகா டிவி நிகழ்ச்சி விளம்பரங்கள் குறித்து தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
அனைத்து கிளை நிர்வாகிகள் சந்திப்பு, பணிகளை முடுக்கி விடுதல் போன்ற விஷயங்களில் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
மேலும் கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. முன்னதாக ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
No comments:
Post a Comment