அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“சின்ன சின்ன அமல்களால் ஏற்படும் நன்மைகள்!” – மலஸ் கிளை சார்பாக அரேபியன் கல்ஃப் கேம்பில் பயான்

ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலஸ் கிளை சார்பாக சுமேசி பகுதியில் உள்ள அரேபியன் கல்ஃப் கேம்பில் 18-01-2013 ஜும்மாவிற்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மலஸ் கிளை தலைவர் ஏனங்குடி அலாவுதீன் துவக்கவுரை நிகழ்த்தினார், மலஸ் கிளை இணைச் செயலாளர் ஹாஜா நஜ்புதீன்,பொருளாளர் பீர் முஹம்மது, அரேபியன் கல்ஃப் கேம்ப் பொறுப்பாளர் ஹஸன் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மண்டலப் பேச்சாளர் மௌலவி உபைதுல்லாஹ் சின்ன சின்ன அமல்களால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மலஸ் கிளை சென்ற மாதத்தில் தஃவா பணிகளில் முதலிடம் வகித்த செய்தி பதிவு செய்யப்பட்டது. 26 Jan குடியரசு தினத்தை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ் வரும் 25-01-2013 அன்று KFMC யுடன் ரியாத் TNTJ இணைந்து நடத்தவுள்ள சிறப்பு இரத்ததான முகாம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அறிவை அடகு வைப்பதற்கா ஆன்மீகம் என்ற தலைப்பிலான DVD கள் வினியோகிக்கப்பட்டது. மேலும் தர்மத்தின் சிறப்புகள்என்ற தலைப்பிலான நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்க்க விளக்க நூல்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன.
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.