ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையில், மாநில துணைத் தலைவர் சகோ. எம்,ஐ. சுலைமான் அவர்கள் கலந்து கொண்ட சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 21.12.2012 வெள்ளியன்று மதியம் ஜூம்ஆவிற்கு பிறகு மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷேக் அப்துல் காதர், மற்றும் கிளை தலைவர் ஜஹாங்கீர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
"நவீன உலகில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்" என்ற தலைப்பில் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்கள் சிறப்புரையாற்றினார். சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்தனர். கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment