மாநில துணைத் தலைவர் சகோ. எம். ஐ. சுலைமான் அவர்கள் நடத்திய தர்பியா நிகழ்ச்சி கடந்த 21.12.2012 வெள்ளியன்று அஸர் தொழுகைக்குப் பின், ரியாத் சுலை பகுதியில் உள்ள ஓர் இஸ்திராஹாவில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை கொள்கை குர்ஆன் & சுன்னா பற்றியும், இஜ்மா கியாஸ் குறித்த விளக்கங்கள், யார் உண்மையான தவ்ஹீத்வாதிகள் என்பது பற்றிய விளக்கங்கள், சலபு கொள்கை, வரதட்சணை திருமணம், ஒரே மேடையில் பிற இயக்கத்தினருடன் சேராதது, தேர்தலில் போட்டியிடாமை, அரசியல் நிலைபாடு, நமது தனித்துவம், இஹ்லாஸ் மற்றும் இன்னபிற கொள்கை விளக்கங்கள் சிறப்பாக விளக்கப்பட்டது.
ரியாத் மண்டல நிர்வாகிகள், மண்டல செயற்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக அமைந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், கிளை நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கினார். மண்டல செயலாளர் சகோ. நவ்லக் தலைமையில் மண்டல நிர்வாகிகள்/கிளை நிர்வாகிகள் களப்பணியாற்றினர்.
No comments:
Post a Comment