அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"சதக்கதுல் ஜாரியா" - ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 04.01.2013

ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 04.01.2013 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார். புரைதாவிலிருந்து வந்திருந்த அல்கசீம் மண்டல தலைவர் சகோ. சையது இப்ராஹிம் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
 
சதக்கத்துல் ஜாரியா என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் சிறப்புரையாற்றினார். கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. அதிகரிக்கப்பட்ட செயல்பாடுகளை எவ்வாறு தொடர்ந்து தொடர்வது என்பது குறித்தும், குடியரசு தினத்தை ஒட்டிய இரத்த தான முகாம், தர்பியா, கட்டட நிதி, புதிய டிவிடிக்களை மக்களுக்கு உடனுக்குடன் வழங்குதல், 2013 காலண்டர் மற்றும் இன்னபிற செயல்பாடுகளும் விவாதிக்கப்பட்டன.
 
ரியாத் மண்டலம் மற்றும் ரியாத் மண்டல கிளைகள் டிசம்பரில் பெற்ற புள்ளிகளை சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் விளக்கினார்.
 
நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் மவுலவி அவர்கள் பொறுப்பும் அமானிதமே என்ற தலைப்பில் உரையாற்றி, கூட்டத்தினை நிறைவு செய்தார்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.