கடந்த 07-01-2013 அன்று ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளை சார்பாக சவூதி கேட்டரிங் கேம்பில் மாதாந்திர பயான் நடைபெற்றது. இது சகோ. ஆஹாகான், சகோ. ஜமால் மற்றும் சவூதி கேட்டரிங் கேம்ப் சகோதரர்களின் ஏற்பாட்டில் மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. பெரியபட்டிணம் சாகுல் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், தர்மங்கள் செய்து பாவங்களுக்கு பரிகாரம் தேடுவோம், தீமைகளை வெறுப்போம், நன்மைகளை விரும்புவோம் என்பதை வலியுறுத்தி ‘நன்மைகளை கொள்ளையடிப்போம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment