கடந்த 28-12-2012 அன்று அஜீஸியா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. (சாகுல்) அப்துல் ஹமீது அவா்கள் கிளை செய்திகளை கூறி துவக்கி வைத்தார். அடுத்ததாக மண்டலம் சா்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன், "இஸ்லாம் - இஸ்லாம் மட்டுமே ஏன்?“ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக மண்டல துணைச் செயலாளர் சகோ.அரசூர் ஃபாரூக் அவா்கள் 29-12-12 அன்று "தமிழகத்தில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டம் ஏன்?" என்பது பற்றியும், தலைமை மற்றும் மண்டல செய்திகளையும் எடுத்துரைத்தார். மதிய உணவு பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
மேலும் அஜீஸியா கிளையில் "வருமுன் உரைத்த இஸ்லாம்" உட்பட பல்வேறு மொழிகளிலான மார்க்க விளக்க புத்தகங்கள் இந்த வாரம் முழுவதும் சகோ. ஓட்டை இஸ்மாயில் தலைமையில் மக்கள் தங்கும் கேம்புகளிலும், மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீம், சகோ.அரசூா் .பாரூக் முன்னிலையில் கிளை நிர்வாகிகளால் ஜூம்ஆ தொழுகை (28.12.2012) முடிந்து வரும் மக்களிடமும் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment