அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டலம் மூலமாக தாயகம் செல்ல உதவி

லால்பேட்டை அருகில் உள்ள ஊரைச் சேர்ந்தவர் சகோ. ஹஸன். இவர் ரியாதில் பணிபுரிந்து வருகிறார். வருகின்ற ஜனவரியில் அவருக்கு தாயகத்தில் திருமணம் நடக்க உள்ளது, இன்ஷா அல்லாஹ். இந்நிலையில், விடுமுறையில் தாயகம் செல்வதற்காக தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளரை (Sponsor) அணுகியபோது, அவருடைய கடவுச்சீட்டு (Passport) தொலைந்து போய் விட்டதால் தாயகத்திற்கு உடனடியாக செல்ல முடியாது என ஸ்பான்ஸர் தெரிவித்து விட்டார். திருமணத்தை தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை அறிந்த அந்த சகோதரர், ரியாத் மண்டலத்தை கடந்த 25.12.2012 அன்று கவலையுடன் தொடர்பு கொண்டார். உடனடியாக, மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்களின் மேற்பார்வையில், தாவூத் என்ற சகோதரர் மூலமாக அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு, குறித்த காலத்தில் அவர் தாயகம் சென்றார். அல்ஹம்துலில்லாஹ்...
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.