அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - நியூ செனைய்யா கிளையில் புத்தகங்கள்/டிவிடிக்கள் மூலம் சத்திய பிரச்சாரம்

வெளிநாடுகளில் பணிபுரியும் (பெயரளவிலான)முஸ்லிம்கள், தங்களுடைய ஓய்வு நேரத்தை சினிமா டிவிடிகள் பார்த்தும், சூதாட்டம் மூலமும், வீண் அரட்டை மற்றும் புறம் - அவதூறுகளிலுமாக பல்வேறு வழிகளில் தங்களுடைய பொன்னான நேரத்தினை வீண் விரயம் செய்கின்றனர். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் நியூ செனைய்யா கிளை நிர்வாகிகள், இறைவன் தமக்களித்த நேரத்தை மறுமைக்கு பயன் உள்ள வகையில் சத்திய இஸ்லாத்தினை அதனை அறியாதவருக்கு எடுத்துரைக்கும் பணியினை சிறப்பாக செய்து வருகின்றனர்.
கடந்த 22 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை, சிறப்பு சத்திய அழைப்புக்கான நேரமாக கருதி, ரியாதில் புறநகர் பகுதியான நியூ செனைய்யாவில் தற்போதுள்ள கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், பல்வேறு நிறுவனங்களில் கடுமையான வேலைகளை செய்யும் சகோதரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளுக்குச் சென்று உருது மற்றும் தமிழ் மொழிகளில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய தலைப்பிலான 500 டிவிடிக்களையும், "வருமுன் உரைத்த இஸ்லாம்", "நபிமொழிகள் 50" ஆகிய புத்தகங்கள் உட்பட உருது, வங்காளம், இந்தி ஆகிய மொழிகளிலும் 1555 புத்தகங்களையும் விநியோகித்தனர்.
மேலும், "தர்மத்தின் சிறப்பு" என்ற தலைப்பிலான நோட்டீஸும் விநியோகம் செய்யப்பட்டது.
நியூ செனைய்யா கிளை நிர்வாகிகள் சகோ. கமால், சகோ. ஆசாத், மற்றும் ரியாத் மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் ஆகியோர் களப்பணியில் மேற்கண்ட அழைப்புப் பணிகள், நியூ செனைய்யா பகுதியில் பரவலாக மேற்கொள்ளப்பட்டன. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்...
 

 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.