ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளை சார்பாக, குழு தஃவா பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி பதினைந்து நாட்கள், தஃவா பணிகள் முடுக்கி விடப்பட்டு, தினந்தோறும் இரவு 9.30 மணிக்குப் பிறகு, நஸீம் மாரத் பகுதியில், அனைவருக்கும் வேலை நேரம் முடிந்தபின், புத்தகங்கள் விநியோகம், நோட்டீஸ் விநியோகம், டிவிடிக்கள் விநியோகம், குழு தஃவா மற்றும் தனி நபர் தஃவா ஆகியவை நஸீம் கிளை நிர்வாகிகளால் மிகச்சிறப்பாக நடைபெற்றன.
துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்:
"ஸஃபர் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்", "இஸ்லாத்தில் மனித நேயம்", "தர்மத்தின் சிறப்பு" ஆகிய துண்டுப் பிரசுரங்கள் டிசம்பர் 31, 28, 19, 15, 8 தேதிகளில் விநியோகிக்கப்பட்டன.
புத்தகங்கள் விநியோகம்:
சகோ. பி.ஜெ. அவர்கள் எழுதிய "வருமுன் உரைத்த இஸ்லாம்", "மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகங்களும், "நபிமொழிகள் 50" ஆகிய புத்தகங்கள் உட்பட தமிழ், வங்காளம், சிங்களம், ஹிந்தி, உருது மொழி புத்தகங்கள் 998 பிரதிகள் நஸீம் பகுதியில் மாரத்தில் டிசம்பர் 31-30, 28-22, 19, 15-10, 8 தேதிகளில் பரவலாக விநியோகிக்கப்பட்டது. நமது நிர்வாகிகளின் இப்பணியை பாராட்டி ஆர்வத்துடன் பலமொழி பேசும் மக்களும் வாங்கிச் சென்று பயனடைந்தனர்.
குழு தஃவா:
டிசம்பர் 8 முதல் 31 ஆம் தேதி வரை, நஸீம் மாரத் பகுதியில் தமிழ் மக்கள் பணிபுரியும் இடங்களில் சென்று 15 நாட்களில் 15 குழு தஃவா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் அவர்கள் சிற்றுரைகள் நிகழ்த்தி, மக்களுக்கு அழைப்புப் பணி செய்தார். கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்...
No comments:
Post a Comment