அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“எளிதில் ஆங்கிலம் பேசிட!” – ரியாத் மண்டலம் சார்பாக “ஸ்போக்கன் இங்கிலீஷ்” தர்பியா வகுப்புகள்

ல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையினால், தமிழ்நாடு தவ்ஹீத் ரியாத் மண்டலம், மார்க்க மற்றும் சமுதாய பணிகளை பரவலாக செய்வதுடன், மக்களுக்கு பயன் தரக் கூடிய கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளாக குர்ஆன் வகுப்புகள், கம்ப்யூட்டர் வகுப்புகளை - தொடர் தர்பியாக்களாக நடத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, ரியாத் மண்டலத்தின் மற்றுமொரு மைல் கல்லாக, "எளிதில் ஆங்கிலம் பேசிட!" என்ற தலைப்பில் "ஸ்போக்கன் இங்கிலீஷ்" வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அபூவஸ்மி (எ) T.நைனா முஹம்மது அவர்கள் இந்த தர்பியா வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றார். வாரத்திற்கு இருமுறை ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இம்மாதத்தில், ஜனவரி 15, 13, 8 & 6 தேதிகளில் வகுப்புகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு இந்த தர்பியா வகுப்புகள் நடைபெற உள்ளன, இன்ஷா அல்லாஹ்... கடந்த வார பாட  திட்டங்களிலிருந்து கேள்விகள் கேட்டு முடித்த பின்பு புதிய பாடத்திட்டங்களை சகோ. நைனா முஹம்மது தொகுத்து வழங்கினார். தினம் ஒரு தகவல்,இலக்கண பாடங்கள் போன்றவை இன்றைய தர்பியாவில் விளக்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு வாரத்திற்கான பாடங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
முன்னதாக 06.01.2013 அன்று மண்டல செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் தலைமையில் இந்த தர்பியா நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. நிறுவனங்கள், கடைகள் மற்றும் சொந்த தொழில் செய்யும் சகோதரர்கள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.