ரியாத் மண்டல புறநகர் கிளைகளில் ஒன்றான அல்கர்ஜ் கிளையின் செனைய்யா பகுதியில் பயான் நிகழ்ச்சி கடந்த 28.12.2012 ஜீம்ஆவிற்கு பிறகு நடைபெற்றது.
மண்டலச் செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் தலைமையில் மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் மற்றும் அல்கர்ஜ் நிர்வாகிகளான சகோ. வழுத்தூர் அன்சாரி, நஸீர், சையத் ஆகியோர் முன்னிலை வகிக்க, மண்டல பேச்சாளர் சகோ. மவுலவி முஹம்மது அலி MISc அவர்கள் ”நிரந்தர மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலோர் தமிழ்நாட்டின் உருது பேசும் மக்களாக இருந்ததால் அவர்களின் கோரிக்கையை ஏற்று சகோ. நவ்லக் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளை விபரமாக உருதுவில் எடுத்துக் கூறி மாநிலத் தலைமையகத்திற்காக ஒரு கட்டடம் கட்ட வேண்டியுள்ள நிர்ப்பந்த சூழ்நிலையையும் விளக்கிக் கூறினார்.
பிறகு கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment