ரியாத் TNTJ – மலஸ் கிளை சார்பாக, கடந்த 10.01.2013 அன்று ஜரீர் பள்ளியில் இரவு 10 மணிக்கு நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்ச்சியில், சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் சகோ. சோழபுரம் ஹாஜா மைதீன், சகோ. ஜாஹிர் உசேன், சகோ. ஜான்பாஷா, மற்றும் சகோ. முத்துவாப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மலஸ் கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் துவக்கவுரையாற்றினார். மண்டல பேச்சாளர் சகோ. உபைதுல்லாஹ் மௌலவி அவர்கள் "நபி வழியில் ஒளு மற்றும் தொழுகை” தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஒளு மற்றும் தொழுகை செய்முறை விளக்கம், இதில் ஏற்படும் தவறுகள் முதலானவை விளக்கப்பட்டு கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. "இஸ்லாத்தில் மனித நேயம்" துண்டுப்பிரசுரமும், தொழுகை விளக்க படங்கள் அடங்கிய பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. மண்டல - மாநில செய்திகளை சகோ. நூருல் அமீன் விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
தர்பியா
மலஸ் கிளை
“நபி வழியில் ஒளு மற்றும் தொழுகை” – மலஸ் கிளை தர்பியா நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment