அல்லாஹ்வின் அளப்பெருங்கிருபையால், கடந்த 20.12.2012 வியாழன்று இரவு, ரியாத் மண்டலத்தின் ஏற்பாட்டில், சவூதி TNTJ கூட்டமைப்பு கூட்டம் மாநில துணைத் தலைவர் சகோ. எம்.ஐ.சுலைமான் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத் தலைவர் சகோ. பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "சவூதி கூட்டமைப்பு செய்ய வேண்டிய பணிகள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் சிறப்புரையாற்றினார். அதனை அடுத்த சகோ. எம். ஐ. சுலைமான் அவர்கள், "தமிழகத்தில் மாநிலத்தின் பணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதனை அடுத்து, மண்டலங்களுக்கிடையேயான கலந்தாலோசனை நடைபெற்றது. மாநிலத்திற்கான பங்களிப்புகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ரியாத், தம்மாம், ஜெத்தா, அல்கஸீம், அல்ஹஸா மண்டலங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ரியாத் மண்டல நிர்வாகிகள், தொண்டரணியினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment