தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 11.01.2013 வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.
கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளையும் பொறுப்பாளர் சகோ. நிஜாம் விளக்கினார். கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது குறித்தும், ரியாத் சார்பாக முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு மதிப்பு மிகு பரிசுகள் வழங்கப்பட்டது குறித்தும் விளக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ், வருகின்ற மாதம் பொறுப்புகள் சீரமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment