அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பத்தாஹ் கிளை குழு தஃவா

ரியாத் மண்டலத்தின் தஃவா பணிகளை முடுக்கி விடும் பொருட்டு, புத்தகங்கள் வழங்குதல், டிவிடிக்கள் வழங்குதல், பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல், மக்கள் குழுமும் இடங்களில் சென்று குழு தஃவா / தனி நபர் தஃவா செய்தல் முதலான பணிகளுக்கு கடந்த 02.11.2012 அன்று நடந்த ரியாத் மண்டல செயற்குழுவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், பல்வேறு கிளைகளில், மண்டல நிர்வாகிகள் முன்னிலையிலும் கிளை நிர்வாகிகள் மூலமாகவும் அழைப்பு பணிகள் நடைபெற்றன. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...

பத்தாஹ் கிளை குழு தஃவா:  ரியாதின் மையப்பகுதியான பத்தாஹ்வில் மிக அதிகமான அளவில் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கடைகளில் பணி புரிகின்றனர். ஆனால், மிக அதிகமான வேலை நேரத்தால், TNTJ நடத்தும் பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் அவர்கள் வேலை முடித்து வந்த பிறகு, 03.11.2012 அன்று அவர்கள் தங்கியிருக்கும் ரூம்களில் சென்று தனி நபர், குழு தஃவா செய்யப்பட்டது. தொழுகை என்ற தலைப்பிலும், சுய பரிசோதனை என்ற தலைப்பிலும் முறையே சகோ. அப்பாஸ் மற்றும் சகோ. நூருல் அமீன் ஆகியோர் மார்க்க விளக்க கருத்துக்களை எடுத்துக்கூறி அழைப்புப்ப் பணி செய்தனர். மேலும், TNTJ ஆற்றி வரும் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த வாரம் முழுவதும் "தவ்ஹீத் மாப்பிள்ளை(?!?")" மற்றும் "புகை பிடித்தல் ஒரு பாதக செயல்" போன்ற நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டன.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.