அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நஸீம் கிளையில் குழு தஃவா, புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

ரியாத் மண்டலத்தின் தஃவா பணிகளை முடுக்கி விடும் பொருட்டு, புத்தகங்கள் வழங்குதல், டிவிடிக்கள் வழங்குதல், பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல், மக்கள் குழுமும் இடங்களில் சென்று குழு தஃவா / தனி நபர் தஃவா செய்தல் முதலான பணிகளுக்கு கடந்த 02.11.2012 அன்று நடந்த ரியாத் மண்டல செயற்குழுவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், பல்வேறு கிளைகளில், மண்டல நிர்வாகிகள் முன்னிலையிலும் கிளை நிர்வாகிகள் மூலமாகவும் அழைப்பு பணிகள் நடைபெற்றன. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்... 

நஸீம் கிளையில் குழு தஃவா, புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்: 04-11-12 அன்று நஸீம் கிளையில் குழு தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக் தலைமையில் நஸீம் கிளை நிர்வாகிகள் நஸீம் மாரத் கார் மார்க்கெட் பணிபுரியும் நம் தமிழ் பேசும் மக்களிடம் சென்று தனி நபர் தஃவா / மார்க்கப் பிரச்சாரம் செய்தனர். TNTJ வின் செயல்பாடுகளும் விளக்கப்பட்டன. அத்துடன் உருது, மலையாளம், ஆங்கில இஸ்லாமிய புத்தகங்களும், வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற தமிழ் புத்தகமும் மக்களுக்கு பல பிரதிகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. உருது மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் டிவிடிக்கள் வழங்கப்பட்டன. இந்த வாரம் முழுவதும் நஸீம் பகுதியிலுள்ள வாகன விற்பனை நிலையங்கள், தொழிலாளர்கள் தங்குமிடங்கள் மற்றும் உணவகங்களில் "தவ்ஹீத் மாப்பிள்ளை(?!?")" மற்றும் "புகை பிடித்தல் ஒரு பாதக செயல்" போன்ற நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.