ரியாத் மண்டலத்தின் தஃவா பணிகளை முடுக்கி விடும் பொருட்டு, புத்தகங்கள் வழங்குதல், டிவிடிக்கள் வழங்குதல், பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல், மக்கள் குழுமும் இடங்களில் சென்று குழு தஃவா / தனி நபர் தஃவா செய்தல் முதலான பணிகளுக்கு கடந்த 02.11.2012 அன்று நடந்த ரியாத் மண்டல செயற்குழுவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், பல்வேறு கிளைகளில், மண்டல நிர்வாகிகள் முன்னிலையிலும் கிளை நிர்வாகிகள் மூலமாகவும் அழைப்பு பணிகள் நடைபெற்றன. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...
முர்ஸலாத் கிளையில் குழு தஃவா: 05-11-12 அன்று முர்ஸலாத் கிளை சார்பாக அதன் செயலாளர் சகோ. கடையநல்லூர் அமீருதீன் அவர்களின் ஏற்பாட்டில், மண்டல நிர்வாகிகளான அப்துல் ரஹ்மான் நவ்லக், முஹம்மது மாஹீன் மற்றும் மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. பெரியபட்டிணம் ஷாகுல் ஆகியோர் அப்பகுதியிலுள்ள கடைகள், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் தமிழ் மற்றும் மலையாள சகோதரர்களிடம் சென்று "தனி நபர் தஃவா" - மார்க்கப் பிரச்சாரம் செய்தனர். மேலும் "தவ்ஹீத் மாப்பிள்ளை(?!?)" மற்றும் "புகை பிடித்தல் - ஒரு பாதகச் செயல்" என்ற நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டன. மேலும் சகோ.பீ.ஜே அவர்கள் எழுதிய ‘வருமுன் உரைத்த இஸ்லாம்’ உட்பட வங்காள, மலையாளம், உருது, ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல்வேறு மொழியிலான மார்க்க விளக்க புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சகோ. பிஜெ அவர்களின் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், எளிய மார்க்கம் உருது மொழியாக்க டிவிடிக்களும் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment