அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் நியூ செனைய்யா பகுதியில் இரண்டாவது வார மார்க்கப் பிரச்சாரம் - நவ 2012

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக சிறப்பான முறையில் தஃவா பணிகள் நடைபெற்று வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்...  

இந்த வார பணிகளாக, மார்க்க விளக்க நிகழ்ச்சி, புத்தகங்கள் விநியோகம், டிவிடிக்கள் விநியோகம், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், குழு தஃவா முதலானவை நடைபெற்றன. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  

கடந்த 14.11.2012 அன்று, வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகங்கள் உட்பட தமிழ் & வங்காள மொழி பேசும் மக்களிடையே புத்தகங்கள் விநியோகித்து அழைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.   மேலும், முஹர்ரம் 1 ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில், முஸ்லிம் மக்கள் பல அனாச்சாரங்களை செய்கின்றனர். அவற்றைக் களையும் வண்ணம் கடந்த வாரம் முழுவதும் "ஹிஜ்ரி ஆண்டு" என்ற துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.   மேலும், தவ்ஹீத் போர்வையில் நடமாடும் இளைஞர்கள், திருமணம் என்று வந்து விட்டால், வரதட்சணை உட்பட்ட அனைத்து அநாச்சாரங்கள் தவறுகளுக்கு உட்படுகின்றார்கள். அவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த "தவ்ஹீத் மாப்பிள்ளை(?!?)" என்ற தலைப்பில் தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் துண்டுப்பிரசுரமானது கடந்த 13 மற்றும் 14.11.2012 ஆகிய தேதிகளில் விநியோகித்து அழைப்புப்பணி செய்யப்பட்டது.  

கடந்த 09.11.2012 அன்று நியூ செனைய்யா கிளை சார்பாக, பொது இடங்களுக்கு சென்று பொது மக்களை சந்தித்து அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு ஜூம்ஆவுக்கு வரும் அனைத்து மொழி சகோதரர்களுக்கும், நியூ செனைய்யா சிஃபோரக்ஸ் கம்பெனி பெரிய பள்ளியில், புத்தக விநியோகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கில் வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், மலையாளம், ஹிந்தி, சிங்களம், தக்கோலோ (பிலிப்பைன்ஸ்), தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் புத்தகங்கள் விநிநோகிக்கப்பட்டன.   மேலும், கடந்த 08.11.2012 அன்று தனிநபர், குழு தஃவா அடிப்படையில் தொழுகையின் அவசியம் குறித்து அழைப்புப்பணி செய்யப்பட்டது. உணவகத்தில் பணிபுரியும் மீரான் என்ற சகோதரர், புரோட்டா மாஸ்டராக பணியில் சேரும்முன் தொழுது கொண்டிருந்தேன்; தற்போது வேலைப்பளுவால் இயலவில்லை என்று கூறிய போது, போர் புரியும் காலங்களிலும் தொழுகை கடமை; மறுமையில் அல்லாஹ்வின் பிடி கடுமையானது என விளக்கப்பட்டது. இனி கண்டிப்பாக, பணிபுரியும் இடத்தில் தொழுது கொண்டாவது தொழுகை கடமையை நிறைவேற்றுவேம் என சகோ. மீரான் உறுதி பூண்டது நெகிழ்ச்சியாக அமைந்தது. கிளை நிர்வாகிகளுக்கும் இது போன்ற விஷயங்கள் ஊக்கமாக அமைகின்றன.   நியூ செனைய்யா கிளை நிர்வாகிகள் சகோ. கமால், சகோ. ஆசாத் மற்றும் மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் பாரூக் ஆகியோர் பொறுப்பில் மேற்கண்ட பணிகள் சிறப்புற நடைபெற்றன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.