ஃபெய்ஸாலியா கிளையில் கடந்த 09-11-12 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.கலீல் அவர்கள் துவக்கவுரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி, ‘சொர்க்க சோலைகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக மண்டல வர்த்தக அணி செயலாளர் சகோ.அக்பர் அவர்கள், மண்டல மற்றும் மாநில செய்திகளை பகிர்ந்து கொண்டார். முன்னதாக ஃபெய்ஸாலியா பகுதியில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசல் முன்னதாக, தொழுகை முடிந்தவுடன் சகோ. பி.ஜெ. அவர்கள் எழுதிய "வருமுன் உரைத்த இஸ்லாம்" புத்தகங்கள் மிக அதிக அளவில் விநியோகிக்கப்பட்டன. பிற மொழி பேசும் சகோதரர்களுக்கும் மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், "தவ்ஹீத் மாப்பிள்ளை(?!?)", "புகை பிடித்தல் - ஒரு பாதகச் செயல்" துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபைஸலியா கிளை
கிளை நிகழ்ச்சி
‘சொர்க்க சோலைகள்’ - ஃபெய்ஸாலியா கிளையில் சொற்பொழிவு
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment