ரியாத் மண்டலத்தின் சார்பாக, கடந்த 15.11.2012 வியாழன்று இரவு, சுலை பகுதி அல்-அயில்ல இஸ்திராஹாவில், குடும்பத்தினருக்கான மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அமீர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள், “குடும்பம் ஓர் அமானிதம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆண்கள்/பெண்கள்/சிறார்கள் என சுமார் 100 பேர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் மண்டல மாநில செய்திகளை விளக்கினார்.
மேலும், ரியாத் மண்டலம் சார்பாக "தவ்ஹீத் மாப்பிள்ளை" என்ற மார்க்க விளக்க துண்டுப் பிரசுரமும், “காலத்தே பயிர் செய்“ என்ற துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது, மேலும், மர்கஸிலும், பொது இடங்களிலும் விநியோகிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment