அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் சித்தீன் கிளையின் குழு தஃவா, நோட்டீஸ்/டிவிடி/புத்தகங்கள் விநியோகம் – அழைப்புப் பணிகள் – நவ 2012

ல்லாஹ்வின் கிருபையால் கடந்த 10 நாட்களில் ரியாத் சித்தீன் கிளையின் பிரச்சாரப் பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த 22.11.2012 அன்று சித்தீன் கிளை சார்பாக ஆஷூரா நோன்பு பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கடந்த 16.11.2012 & 19.11.2012 தேதிகளில், TNTJ.NET இலிருந்து டவுன்லோட் செய்யப்பட்ட பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற நோட்டீஸ் சித்தீன், ஜஹ்ரா பகுதிகளில் மிக அதிக அளவில் விநியோகிக்கப்பட்டது.
மேலும் கடந்த வாரத்தில், காலத்தே பயிர் செய் என்ற துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
புகை பிடித்தலின் தீங்குகளை விளக்கி 08.11.2012 & 10.11.2012 ஆகிய தேதிகளில் நூற்றுக் கணக்கான புகை பிடித்தல் ஒரு பாதகச் செயல் என்ற நோட்டீஸ்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.
மேலும், துண்டுப்பிரசுரங்கள் மட்டுமல்லாமல், இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், இனிய மார்க்கம் உருது மொழி பெயர்ப்பு டிவிடிக்கள் சித்தீன், ஜஹ்ரா, மலஸ் மற்றும் ஹாரா பகுதிகளில் வாழும் ஹைதராபாத் & பாகிஸ்தான் சகோதரர்களுக்கு கடந்த 08, 10, 11, 12 ஆகிய தேதிகளில் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
இது மட்டுமன்றி, மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் உள்ளிட்ட புத்தகங்கள் தமிழ் பேசும் சகோதரர்களுக்கு கடந்த 08, 11, 13 தேதிகளில் வழங்கப்பட்டது.
கடந்த 09.11.2012 அன்று தொழுகையின் முக்கியத்துவத்தினை விளக்கி குழு தஃவா செய்யப்பட்டது.
சித்தீன் கிளை தலைவர் சகோ. சையது அலி, செயலாளர் சகோ. அப்பாஸ், பொருளாளர் ஜாக்கிர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இந்த அழைப்பு பணிகள் சிறப்புற மேற்கொள்ளப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.