அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இயற்கைச் சீற்றங்கள் தரும் பாடங்கள்" - ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 02.11.2012

ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 02.11.2012 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார்.  மண்டல செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத்,  மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“இயற்கைச் சீற்றங்கள் தரும் பாடங்கள்” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி மவுலவி சிறப்புரையாற்றினார். மண்டல செயல்பாடுகளை விளக்கி சகோ. ஃபெய்ஸல் பேசினார்.

இம்மாதம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் தர்பியா நிகழ்ச்சிகள் நடத்துதல், நோட்டிஸ் விநியோகம், டிவிடிக்கள் விநியோகம் ஆகியவற்றை முடுக்கி விடுதல் குறித்து பேசப்பட்டது.

20 ஆவது இரத்ததான முகாமினை சிறப்பாக நடத்திய ஒலைய்யா கிளைக்கும், 21 ஆவது இரத்ததான முகாமில் அதிக எண்ணிக்கையில் கொடையாளிகளை அழைத்து வந்து முதலிடம் பெற்ற மலஸ் கிளைக்கும் விருதுகள் வழங்கப்பட்டன; முறையே ஒலையா கிளைச் செயலாளர் சகோ. அயூப், மலஸ் கிளை தலைவர் அலாவுதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.  ஜூம்ஆ தொழுகைக்கு முன்னதாக கூட்டம் இனிதே முடிவுற்றது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.