அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

‘அறிவோம் முஹம்மது (ஸல்) அவர்களை!’ - நஸீம் கிளையின் பயான்

ஸீம் கிளையில் கடந்த 08-11-12 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ.அஷ்ரப் அவர்கள் ‘இஸ்லாமிய இளைஞர்கள்’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார். அதை தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘அறிவோம் முஹம்மது (ஸல்) அவர்களை!’’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக மண்டல துணை தலைவர் சகோ.நிஜாம் அவர்கள், மண்டல மற்றும் மாநில செய்திகளை பகிர்ந்து கொண்டு கிளை மேம்பாட்டுக்கான ஆலோசனைகளையும் குறிப்பிட்டார். உணவு பரிமாறப்பட்டு இரவு 12.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.  

மேலும் இஸ்லாத்தை அறிய விரும்பும் விக்ரம் என்ற சகோதரருக்கு நஸீம் கிளை சார்பாக திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. மண்டல துணை தலைவர் சகோ.நிஜாம் அவர்கள் அதை வழங்கினார். மேலும், நஸீம் கிளை நிர்வாகிகள் மூலம் வருமுன் உரைத்த இஸ்லாம் உட்பட பல மார்க்க விளக்க புத்தகங்கள், பயான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத சகோதரர்களுக்கு அவர்களது பணி புரியும் இடம், இருப்பிடம் சென்று வழங்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.