ரியாத் மண்டலத்தின் தொடர் தஃவா பணிகளின் ஓர் அங்கமாக, நியூ செனைய்யா கிளையில் மார்க்க விளக்க டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்குதல், மார்க்க விளக்க புத்தகங்களை வழங்குதல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் முதலான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இம்மாதத்தின் முதல் வாரம் முழுவதும், குறிப்பாக 02, 03 மற்றும் 04.11.2012 தேதிகள், தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் கேம்புகளில் சென்று மேற்கண்ட பணிகள் செய்யப்பட்டன. மேலும், உருது, வங்காள, சிங்கள மொழிகள் பேசும் சகோதரர்களுக்கும் அவர்களது மொழியில் புத்தகங்களும், உருது மொழியாக்க டிவிடிக்களும் வழங்கப்பட்டன. மேலும், புகை பிடித்தலுக்கு அடிமையாகி அதனை தவறென்றே உணராத பல சகோதரர்கள் மிக அதிகமாக இருந்து வரும் இக்கால கட்டத்தில், "புகை பிடித்தல் - ஒரு பாதகச் செயல்" என்ற துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. மேலும், தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் டிவிடிக்களும், உருது பேசும் வட மாநில முஸ்லிம்களுக்கு தஃவா சென்று சேரும் பொருட்டு சகோ. பி.ஜெ. அவர்களின் "உருது மொழியாக்க எளிய மார்க்கம்" டிவிடிக்களும் வழங்கப்பட்டன. நியூ செனையாவிற்கான ரியாத் மண்டல பொறுப்பாளர் சகோ. அரசூர் ஃபாரூக், நியூ செனைய்யா கிளை நிர்வாகிகள் சகோ. ஆசாத், சகோ. கமால் மற்றும் நிர்வாகிகள் இப்பணிகளில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அழைப்பு பணி
டிவிடி விநியோகம்
நியூ செனைய்யா கிளை
புத்தக விநியோகம்
ரியாத் நியூ செனைய்யா பகுதியில் பல்வேறு வகைகளில் மார்க்க பிரச்சாரம் - நவ 2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment