அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் நியூ செனைய்யா கிளையில் மார்க்க விளக்க பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகம், பிற மத கலந்துரையாடல் நிகழ்ச்சி

நோட்டீஸ் விநியோகம்:

நியூ செனைய்யா கிளையில், கடந்த 18 , 19 மற்றும் 26.11.2012 தேதிகளில், காலத்தே பயிர் செய் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்கள் நியூ செனைய்யா பகுதியில் உள்ள தமிழர்கள் வாழும் கேம்புகளில் விநியோகிக்கப்பட்டன.



அன்பான அழைப்புப் பணி:

அனைவருக்கும் தூய இஸ்லாத்தினை கொண்டு சேர்க்கும் முயற்சியாக, மண்டல செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் தலைமையில், நியூ செனைய்யா கிளையில் அன்பான அழைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 18 மற்றும் 26.11.2012 ஆகிய தேதிகளில், நியூ செனைய்யாவில் உள்ள ஃபேக்டரி கிளினிக் பகுதியில் உள்ள வில்லாக்களிலும் தெருக்களிலும் வருமுன் உரைத்த இஸ்லாம், நபிமொழிகள் 50”, பிற மொழி புத்தகங்கள், உருது இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் டிவிடிக்கள் ஆகியவை மண்டல துணைச் செயலாளர்கள் சகோ. மாஹீன், சகோ. அரசூர் ஃபாரூக் ஏற்பாட்டில், கிளைச் செயலாளர் சகோ.கமால் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மூலம் மிக அதிக அளவில் விநியோகிக்கப்பட்டது.



குழு தஃவா:

தொழுகை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், கடந்த 18.11.2012 அன்று நியூ செனைய்யா ஃபேக்டரி கிளினிக் வில்லாவில் நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. நவ்லக் தொழுகையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.



நாஃப்கோ வில்லாவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி:

மறுமைக்கு என்ன சேர்த்தோம்? என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கடந்த 18.11.2012 அன்று இரவு, நாஃப்கோ வில்லாவில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் உரை நிகழ்த்தினார். அதனை அடுத்து மார்க்க விளக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாஃப்கோ நிறுவனத்தில் பணிபுரியும் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

 

 பிறமத சகோதரர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி:

TNTJ ரியாத் மண்டலம் சார்பாக, நியூ செனைய்யா கிளை சார்பாக, கேஸ் பக்காலா பகுதியில் உள்ள வில்லாவில் பிறமத சகோதரர்களுக்கான இஸ்லாமிய விளக்க நிகழ்ச்சி, மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாருக் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் உலகப் பொதுமறை திருக்குர்ஆன் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். 18.11.2012 அன்று நடந்த இந்நிகழ்ச்சியில் கேள்விகளுக்கும் பதில்கள் அளிக்கப்பட்டன.

 


உள்ளரங்கு நிகழ்ச்சி:

ஜன்னத் கஃபே வில்லாவில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி, கடந்த 18.11.2012 அன்று நடைபெற்றது. மண்டல பேச்சாளரும், துணைச் செயலாளருமான சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், எல்லோருக்கும் ஏற்ற மார்க்கம் இஸ்லாம்என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.