ஒலைய்யா கிளை சார்பாக கடந்த 15.11.2012 அன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் நடைபெற்றது. “தவ்ஹீத் மாப்பிள்ளை(!?!)” என்ற தலைப்பிலான நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன.
முன்னதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் அறிவுறுத்தலின் படி இந்த மாதம் முழுவதும் நாயகம் நபி(ஸல்) அவர்களை பற்றிய பிரச்சாரத்தை ரியாத் மண்டலம் அதிகப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஒலைய்யா கிளையில் குழு தஃவா என்ற அடிப்படையில் கடந்த 07.11.2012 அன்று நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டது. அதன் மூலமாக தமிழ் பேசும் மக்களிடம் ‘யார் இவர்?’ என்ற நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. ‘வருமுன் உரைத்த இஸ்லாம் உட்பட பங்களாதேஷ், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்களம், உருது, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மொழியிலான புத்தகங்கள் மற்றும் உருது மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் டிவிடிக்கள் போன்றவை இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் தலைமையில், ஒலைய்யா கிளை செயலாளர் சகோ. அய்யூப் மற்றும் சகோ.திவான் முஹம்மது ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த புதிய முயற்சியான நடமாடும் நூலகத்தில் ஒரு மணி நேரத்தில் 120 புத்தகங்களும் 20 டிவிடிக்களும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment