அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

சுலைமானியா கிளையில் புத்தகங்கள், நோட்டீஸ்கள் விநியோகம்

ரியாத் மண்டலத்தின் தஃவா பணிகளை முடுக்கி விடும் பொருட்டு, புத்தகங்கள் வழங்குதல், டிவிடிக்கள் வழங்குதல், பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல், மக்கள் குழுமும் இடங்களில் சென்று குழு தஃவா / தனி நபர் தஃவா செய்தல் முதலான பணிகளுக்கு கடந்த 02.11.2012 அன்று நடந்த ரியாத் மண்டல செயற்குழுவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், பல்வேறு கிளைகளில், மண்டல நிர்வாகிகள் முன்னிலையிலும் கிளை நிர்வாகிகள் மூலமாகவும் அழைப்பு பணிகள் நடைபெற்றன. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...

சுலைமானியா கிளையில் புத்தகங்கள், நோட்டீஸ்கள் விநியோகம்: சுலைமானியா கிளை சார்பாக அப்பகுதியிலுள்ள கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் தமிழ், மலையாளம், உருது, பங்களாதேஷ் மற்றும் ஆங்கில மார்க்க விளக்க புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் "தவ்ஹீத் மாப்பிள்ளை(?!?)" மற்றும் "புகை பிடித்தல் - ஒரு பாதகச் செயல்" என்ற நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டன. 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.