ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல செயற்குழுக்கூட்டம் 06.03.2015வெள்ளியன்று காலை 9 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது.
துவக்கவுரையாக மண்டல பேச்சாளர் சகோ. தவுஃபீக் சுய பரிசோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ரியாத்தில் மீண்டும் குர்ஆன் வகுப்பு, பேச்சாளர் தர்பியா நடத்தவும் தீர்ணமாணிக்கப்பட்டது. மேலும் இம்மாதம் குர் ஆனைத் திறப்போம் என்ற தலைப்பில் வினாத்தாள் கிளைகள் தோறும் விநியோகித்து, குர்ஆனில் அவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்திட, சரியாக கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு சிறந்த முதல் மூன்று பரிசுகள் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பல நல்ல அம்சங்களை முன் வைத்து நடந்த இந்த செயற்குழு குழு அமர்வு, இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் தம்மால் இயன்ற ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு ஃபிப்ரவரி மாத மண்டல வரவு செலவு கணக்குகள்மண்டல பொருளாளர் சமர்ப்பிக்க கூட்டம் இனிதே ஜும்மா தொழுகைக்கு முன் நிறைவுற்றது.
No comments:
Post a Comment