அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ”– ரியாத் மண்டலம் - 14.11.2014

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ரியாத் மண்டல சிறப்பு பொது நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ரியாத் மண்டலம் சார்பாக  கடந்த 14-11-2014 வெள்ளிக்கிழமை அன்று ரியாத் மண்டலத்தில் முதன் முறையாக "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி" பத்தாஹ்வின் மையப் பகுதியில் அமைந்துள்ள ரமாத் ஹாலில் மதியம் 4 மணிக்கு மண்டல துணைச் செயலாளர் சகோ.அக்பர் துவக்கவுரையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிற மத இந்து கிருத்துவ சகோதரர்கள் 65 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். ஆன்லைன் SKYPE யில் (புரொஜக்கடர்) மூலம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் மவுளவி பிஜெய்னுல்லாபுதீன் அவர்கள் தெளிவான முறையில் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்.

§  உலக அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க முஸ்லீமகள் மீடியாக்களை பயண்படுத்தாதது ஏன்?
§  முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதேன்?
§  மாற்று மதத்தவர்களை மக்காவில் நுழைய ஏன் அனுமதிப்பதில்லை?
§  மீடியாக்களிலும் சினிமாவிலும் முஸ்லீம்களை மட்டும் தீவிரவாதிகளாக சித்திரிப்பது ஏன்?
§  சின்னம்மா மகளை முஸ்லீம்கள் திருமணம் செய்வது ஏன்,
§  பாக்கிஸ்தான், எமேன், எகிப்து நாட்டவர்கள் சக தொழிளார்களுடன் (முஸ்லீம் அல்லாத சகோதரர்களிடம்) இனக்கமாக இங்கு நடந்து கொள்வது இல்லையே ஏன்?
§  உங்களுக்குள் சியா, சுன்னி பிரிவுகள் உள்ளதே எது உண்மை?
§  தர்ஹா வழிபாடு இஸ்லாத்தின் ஏன்?
....... போன்ற இஸ்லாத்தைப் பற்றிய பல முக்கிய கேள்விகள் கேட்க்கப்பட்டது.

இது போன்ற சிறந்ததொரு நிகழ்ச்சியை அடிக்கடி நடத்துமாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் பேசும் சகோதரர்கள் கோரிக்கை வைத்தனர். கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும், முஸ்லீம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தி கேட்ட கேள்விகளுக்கும் மிக அடக்கமாகவும் அழகிய முறையிலும் பதிலுரைத்த விதம், முஸ்லிம் சகோதரர்கள் அவர்களை  உபசரித்த விதமும் இதில் கலந்து கொண்ட பிற மத சகோதரர்ளுக்கு முஸ்லீம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் நல்ல மதிப்பை பெற்றுத் தந்தது என்று பலர் கூறிச் சென்றது  மனதை நெகிழச் செய்தது.

மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு முடிந்த இந் நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவருக்கும் மண்டலம் சார்பாக மாலை சிற்றுண்டி, தேநீர், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு (Non Muslims) இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் கேள்வி கேட்ட அனைவருக்கும் அஜீஸியா கிளை சார்பாக சகோ. பி.ஜெ. மொழிபெயர்ப்பு திருக்குர்ஆன் (13வது எடிசன்), பல ஊர்களில் நடந்த இஸ்லாம் ஓர்னிய மார்க்கம் ஸ்பெஸல் பேக் தொகுப்பு DVD கள் மற்றும் மண்டல் சார்பாக மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்), இதுதான் பைபிள், ஏசு இறைமகனா? நூல்களும் வழங்கப்பட்டதுஇஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள இலசமாக பல தலைப்புகளிளான நூல்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரங்கத்தில் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை ஆற்றிய மண்டல பொருளாளர் சகோநூருல் அமீன் கூறுகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இரத்த தானம் மற்றும் திக்கற்ற நிலையில் உள்ளவர்களுக்கு உதவுதல்மருத்துவ சேவை என பல நல்ல மனித நேயப் பணிகளை செய்து வருவதுடன்இஸ்லாம் குறித்து அறிய விரும்பும் சகோதர சகோதரிகளுக்கு வேண்டிய வழிகாட்டல் செய்யவும் ரியாத் மண்டலம் தயாராக இருப்பதாக அறிவித்தார்மண்டல நிர்வாகிகள்கிளை நிர்வாகிகள்,செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தண்ணார்வ தொண்டர்கள் நிகழ்ச்சி சிறப்புற அயராது பாடுபட்டவர்களுக்கும் நன்றிகள் கூறி மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஆன்லைன் மூலம் ஏற்பாடு செய்திருந்து மாநிலத் தலைமைக்கும் நன்றி கூறி இரவு 8மணிக்கு நிறைவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.