"எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் ” - நியூ சினையா கிளைக்கூட்டம்
மாநில
மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. பஃக்கிர் முஹம்மது அல்தாபி அவர்களின்
வருகையை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நியூ சினையா கிளையில் 25.03.2015 பு தன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்” என்ற தலைப்பில் சகோ. பஃக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து மண்டல செய்தி்களை மண்டல செயலாளர் சகோ. முஹம்மது
யூனுஸ் எடுத்துரைத்து கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் இந்நிகழ்ச்சி யில் 98 சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு கிளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

No comments:
Post a Comment