“செயற்குழுக்
கூட்டம்”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல செயற்குழுக்கூட்டம்
06.06.2014 வெள்ளியன்று காலை 9 மணிக்கு மண்டலத் தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக்
தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான்
அவர்கள் “நிர்வாகிகளிடம்
இருக்க வேண்டிய பண்புகளும், இருக்கக்கூடாத பண்புகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, 28வது இரத்ததான முகாமில் அதிக மக்களைத் திரட்டி வந்து முதலிடம் பிடித்த
நஸீம் கிளைக்கும், 2013 வருடத்தில் சிறப்பாக செயல்பட்டு மண்டலத்தில் முதல் மூன்று இடங்களைப்
பிடித்த கிளைகளுக்கும் (நியூசெனைய்யா, நஸீம், மலஸ்) சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள் விருதுகளை
வழங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment