
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மணடல நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் 18.08.2014 திங்களன்று இஷாவுக்கு பிறகு மண்டல மர்கஸில் மண்டலத் தலைவர் சகோ. அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தின் அஜென்டாவை மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா அவர்கள் வாசித்து வழி நடத்தினார்.
இந்த அமர்வில் தஃவாவின் சிறப்பையும், சமுதாய சிந்தனையையும் கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை முன் வைத்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சிறப்பு நிதி நிலை ஆலோசனைக் கூட்டம் முதன் முறையாக நிர்வாகம் பொறுப்பேற்ற கடந்த 15 மாதங்களில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் கூறிய ஆலோசணையின் படி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
No comments:
Post a Comment