“அழைப்புப் பணியின் அவசியம்”– ஆன்லைன் தஃவா – ரியாத் மண்டல
மர்கஸ்
அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் ரியாத் மண்டல மர்கஸில் 05.09.2014 வெள்ளியன்று இரவு 8:30மணிக்கு மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் ஆன்லைன் தஃவா ஏற்பாடு
செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை
மண்டல பொருளாலர் சகோ. நூருல் அமீன் தொகுத்து வழங்க மேலான்மைக் குழு உறுப்பினர்
சகோதரர். பக்கீர் முஹம்மது அல்தாஃபி , “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் ஆன்லைனில் Skype வாயிலாக
உரையாற்றினார். இந்நிகழ்ச்சி மண்டல புரொஜெக்டர் மூலம் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது மண்டல மாநிலச்
செய்திகளை எடுத்துரைத்தார். பேசிய தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு
பரிசுகள் வழங்கங்கப்பட்டு இரவு 10 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. ஏராளமான
சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment